|
திருமங்கலம் நகர்மன்றத் தலவர் தேர்தல் "பொடா" நாகராஜன் வாக்கு சேகரித்தார்!
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி மன்றத் தலவர், பொறுப்புக்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் ஆதரவ்வொட்டு, கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினர் :தியாக வேங்கை" திருமங்கலம் கொ.நாகராஜன் அவர்கள், மறுமலர்ச்சி தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
14.09.2004 அன்று கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உடன்வர ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று நகராட்சி ஆணையாளர் ரமணன் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் முடிந்தவுடன் நகரிலுள்ள தோழமக் கட்சிகளின் நிவாகிகள், முக்கியப் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள், பல்வேறு பொதுநல அமப்புகளின் நிர்வாகிகள் ஆகியோரச் சந்தித்து ஆதரவு கேட்டார்.
அதன் பின்னர், வாக்காளர்களைச் சந்தித்துப் பம்பரம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்கும் பணியின் முதற்கட்டமாக 18.09.2004 சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் 4-வது வார்ட சேர்ந்த பெருமாள் கோவில் முன்பிருந்து தொடங்கி, ராஜாஜி தெரு.பாரதி தெரு, கணபதி நகர், நாகசாமி நகர், முகமதுஷாபுரம், அண்ணாநகர் ஆகிய பகுதிக்ஜளில் வீடுவீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளருடன் மதுரை மாவட்ட ம.தி.மு.க செயலாளர் "தியாக வேங்கை" வீர.இளவரசன், மதுரை மாவட்டத் தி.மு.க செயலாளர் ப்.மூர்த்தி, திருமங்கலம் நகர ம.தி.மு.க்ல செயலாளர் ஆர்.பூமிநாதன், ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.சுவாமிநாதன், நகர தி.மு.க செயலாலளர் ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் இராஜேந்திரன், நகர காங்கிரஸ் கமிட்டி தலவரும், நகர்மன்ற துணைத் தலவருமான முரளீதரன், காங்கிரஸ் பிரமுகர், பிருதிவிராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் நடராஜன், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி மாநிலப் பொருளாளர் ஒச்சாத்தேவர், ஆனந்தன், தி.மு.க மகளிரணியைச் சேர்ந்த வைரமணி, ஜெயா அக்கினி, செல்வி, ம.தி.மு.க நகர துணைச் செயலாளர் பேச்சியம்மாள் மற்றும் மகளிரணி சகோதரிகள், தோழமக் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
|