மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
Module Border   Module Border
முகப்பு
செயலாளர் கடிதம்
பிரச்சார சுற்றுப்பயணம்
தொடக்க விழா - சிங்கப்பூர்
தேர்தல் அறிக்கை 2004
Module Border Module Border
Module Border   Module Border
 

வைகோவின் நடைப்பயணம்!



வைகோவின் மறுமலர்ச்சி நடைப்பயணம் வெற்றிப் பயணம்!

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கும் 3000 தொண்டர் அணியினரும் திருநெல்வேலியில் ஆகஸ்டு 5-ஆம் நாள் தொடங்கிய மறூமலர்ச்சி நடைப்பயணம் செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கிய மறுமலர்ச்சி நடப்பயணம் செப்டம்பர் 15 - ஆம் நாள் - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் மாபெரும் வீர சாகசத்தோடும் வெற்றியோடும் நிறைவு பெற்றது.

வைகோ அவர்கள் இதுவரை நான்கு முறை நடைப்பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்திருக்கிறார்

முதல்முறையாக, குமரியில் தொடங்கி சென்னை வரை 56 நாள்கள் நடந்தார். இந்த முதல் நடைப்பயணத்தில் ஜெயலலிதா ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே அவரது முழக்காமாக இருந்தது

இரண்டாவது முறையாக, திருவைகுண்டம் தொடங்கித் தூத்துக்குடிவரை ஸ்டெர்லைட் ஆலையின் மாசுவால் ஏற்படும் தீங்கைப் பொதுமக்களுக்கு விளக்கி 3 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.

மூன்றாவது முறையாக, பூம்புகாரிலிருந்து கல்லணை வரை காவிரிப் பிரச்சிணைக்காக 6 நாள்கள் நடந்தார். அம்மூன்று நடபயணங்களைக் காட்டிலும் 4-ஆம் முறை வைகோ அவர்கள் மேற்கொண்ட நடப்பயணம் மக்கள் எழுச்சி கொண்டதாயும், சாகசங்கள் நிறைந்ததாயும் போலீசார் விதித்த தடையை உடைத்தெறிந்து வெற்றிக் கொடியை நாட்டியதாயும் திகழ்ந்தது.

இப்பயணம் சிறப்புற அமைந்ததற்கு நாம் முதலில் நன்றி சொல்லிப் பாராட்ட வேண்டியவர் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்தான்

'உழைப்பதிலா, உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா' என்று கேட்டான் திரைப்படப் பாடலாசிரியன் இலட்சுமணதாஸ், நாடோ டி மன்னன் திரைப்படத்தில்!

வைகோ உழைக்கவும், உழைப்பைத் தோழர்களிடமிருந்து பெறவும் செய்தவர். தோழமையைவிட ஓர் உயர்வு இல்லை என்பதினால் மிக எளிதாக 1028 கி.மீ அதிகமாக அவர் நடந்து சாதனை நிகழ்த்தினார்.

- தீபகற்ப நதிகள் இணைப்பு - இளைஞர்களுக்கு விழிப்பு - வறுமை ஒழிப்பு

ஆகிய பிரச்சனைகளை எடுத்து வைத்து 'மக்களிடம் செல்!' முதலான அறிஞர் அண்ணாவின் முழக்கங்களை நிறவேற்றிக் காட்டிய திராவிட இயக்க அரசியல் சித்தாந்த நடைநாயகனை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். அவர்க்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இதற்கு அடுத்து அவரோடு நடந்து வந்த தொண்டர் அணியினர் உணர்ச்சி குன்றாது வைகோ அவர்களுக்கு ஈடு கொடுத்து சேராது கடமையாற்றினரே அவரது பாதர விந்தங்களை நன்னீராட்டி முத்தமிட்டுப் பாராட்டுகின்றோம். அவர்கள் எல்லா நலனும் பெற வாழ்த்துகின்றோம்.

இந்த நடப்பயணத்தின்போது இசை நிகழ்ச்சிகள் நிகழ்திய சென்னை துரையரசன், நெல்லை அபுபக்கர், உரத்தநாடு கணேஷ்-கோபு குழுவினர்க்கும், மருத்துவ முதலுதவி செய்து வந்த டாக்டர் அருளுக்கும், பிரச்சார வாகனத்தில் இடிமுழக்கம் செய்து வந்த ஈட்டிமுனை இளமாறன் முதலானோர்க்கும் நாம் நன்றியையும் பாராட்டும் தெரிவிக்கின்றோம்.

துணைப் பொதுச் செயலாளர் சத்யா இந்நடைப்பயணப் பணிகளுக்குப் பெரும் பலமாக இருந்தார். தொண்டர் அணி இயக்குநர் ஜீவனின் பணி மறக்க முடியாததாக இருந்தது. தொண்டர் அணிச் செயலாளர் அருள்தாஸ் நடப்பயணத்துக்குப் பெரிதும் துண நின்றார்.

திருச்சி ஷேக் முகமது, ஆல்பர்ட் ஆகியோர் நடைப்பயணத்துக்கு உதவிகள் புரிந்தனர்

மாவட்டச் செயலாளர்கள் நெல்லை மாநகர் நிஜாம், நெல்லை சரவணன், தூத்துக்குடி சேவியர், விருதுநகர் ஆர்.எம் சண்முகசுந்தரம், மதுரை வீர. இளவரசன், மதுரை மாநகர் பூமிநாதன், சிவகங்கை புலவர் சே.செவந்தியப்பன், புதுகை சந்திரசேகரன், திருச்சி மணச்சநல்லூர் நடராசன், திருச்சி மாநகர் மலர்மன்னன், தஞ்சை துரை. பாலக்கிருஷ்ணன், திருவாரூர் தியாகபாரி, நாகை மகாலிங்கம், கடலூர் பத்மநாபன், புதுச்சேரி கவிஞர் மணிமாறன், விழுப்புரம் மாசிலாமணி ஆரணி டி.இராஜா, வேலூர் கிழக்கு உதயகுமார், காஞ்சி க.சோமு, தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், வடசென்னை ஜீவன்,

பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றோர் கரூர் முரளி, வரகனூர் ஜெயராஜ், மதுரை அலெக்சாண்டர், மணிவேந்தன்,

வைகோவின் உதவியாளர்கள் அடைக்கலம், இராசேந்திரன், பா.செல்வராஜ், ஓட்டுநர் துரை,

தொலைக்காட்சியினரை நெறிப்படுத்திய சங்கரன்கோவில் சுதா ஆகியோர்க்கு நம் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கின்றோம்.

நடைப்பயணத்தின்போது 'இடையீடாக' வந்து சென்று கொண்டே இருந்த தோழர்களான அ.கணேசமூர்த்தி, பொடா கணேசன், அழகுசுந்தரம், சபாபதி மோகன், பெல் இராஜமாணிக்கம் போன்ற தோழர்களுக்கும்,

நடைப்பயணம் செல்லுகின்ற வழித்தடத்துக்குரிய மாவட்டச்செயலாளர்கள் நடைப்பயணம் செல்லாத இதர மாவட்டச்செயலாளர்கள் ஆங்காங்கே அவரவர்கள் தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்ட பணிகளுக்காகவும் நாம் பெரிதும் போற்றவும் நன்றிக் கூறவும் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

தலைமைக் கழக நிர்வாகிகளில் கழக அவைத்தலைவர் எல்.ஜி. பொருளாளர் மு.கண்ணப்பன், துணைப்பொதுச் செயலாளர்கள் செஞ்சி ந. இராமச்சந்திரன், நாசரேத் துரை ஆகியோர் தொடக்கம் முதல் இறுதிவரை ஒல்லும் வகையெலாம் பணியாற்றிச் சிறப்பித்து இருக்கின்றனர். அவர்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களை எல்லா அரசியல் கட்சித் தலவர்களும், முன்னனித் தோழர்களும் நடைப்பயணத்தின்போது சந்தித்துச் சால்வை மாலை அணிவித்துத் தத்தமது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கின்றனர். அவர்களுக்கும் நாம் நன்றிப் பாராட்டக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

நெல்லையிலிருந்து சென்னை வரை வழிநெடுக நடைப்பயணத்தை நேரில் கண்டும் வைகோ அவர்களச் சந்தித்தும் உரையடியும் மகிழ்ந்த தமிழ் நெஞ்சங்கள் - நம் உயிருக்கு உயிரானவர்கள் அவர்களது குரலே 'மகேசன் குரல்' என் நினைப்பவர்கள் நாம். அந்நெஞ்சகளுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மொத்தத்தில் வைகோவின் மறுமல்ர்ச்சி நடப்பயணம் வெற்றிப் பயணமாக அமைந்ததில் நாம் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்.

Module Border Module Border
Module Border   Module Border
"அரசியலில் நேர்மை
பொது வாழ்வில் தூய்மை
இலட்சியத்தில் உறுதி"

விடியல்
ஞாயிறு தோறும் ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சிறப்பு ஒளிபரப்பு
விடியல் பாகம் 1
விடியல் பாகம் 2
விடியல் பாகம் 3
விடியல் பாகம் 4
விடியல் பாகம் 5
விடியல் பாகம் 6
வைகோ உரைகள்
தேசிய இளைஞர் நாள் 2001
ஸ்டார் தொலைக்காட்சியில்
திருவாசகம்
Module Border Module Border