மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
Module Border   Module Border
முகப்பு
செயலாளர் கடிதம்
பிரச்சார சுற்றுப்பயணம்
தொடக்க விழா - சிங்கப்பூர்
தேர்தல் அறிக்கை 2004
Module Border Module Border
Module Border   Module Border
 
பெரியார் அண்ணா பாதை எது?

பெரியார் அண்ணா பிறந்த நாள்கள் தமிழர்க்குத் தேசிய திருவிழாக்கள்! இந்த ஆண்டு பெரியார் அவர்களுக்கு 126 ஆவது பிறந்தநாள்; அறிஞர் அண்ணா அவர்களுக்கு 96 ஆவது பிறந்தநாள். நமது கழகப் பத்திரிக்கை சங்கொலி ஏடு வழக்கம் போல அப்பெருமக்களுக்குப் பிறந்தநாள் சிறப்பிதழ் வெளியிட்டு மகிழ்கிறது. இந்த ஆண்டு இவ்விரு பெருவிழாக்களோடு நமது கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஆகஸ்டு 5-ஆம் தேதி திரு—µல்வேலியில் தொடங்கிய மறுமலர்ச்சி பயணம் பெருமைமிகு சென்னையிÖ நிறைவு பெறுகிறது. இவ்விழாக்களோடு - நாம் முப்பெரும் விழாவாக இந்த ஆண்டுக் கொண்டாடுகிறோம். இத்தருணத்தில் நமது அரசியல் எதிரிகள் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளைப் பற்றி மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இவ்விமர்சனங்களைக் கண்டு பயந்து எதிர்கொள்ள முடியாமல் அரசியல் களத்திலிருந்து ஓடி ஒளிந்து கொள்ளுகிறவர்கள் இல்லை - நாம்!

இந்தியப் பூபாகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் எல்லாம் இருப்பதற்கு என்னென்ன தேவைகள், அவசியங்கள், காரணங்கள் இருக்கின்றனவோ, திராவிட இயக்கக் கட்சிகளும் அப்படி இருக்கவேண்டிய காரணமும் தேவையும் அவசியமும் இருக்கின்றன. இல்லை - நாம்!

இந்தியப் பூபாகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் எல்லாம் இருப்பதற்கு என்னென்ன தேவைகள், அவசியங்கள், காரணங்கள் இருக்கின்றனவோ, திராவிட இயக்கக் கட்சிகளும் அப்படி இருக்கவேண்டிய காரணமும் தேவையும் அவசியமும் இருக்கின்றன. நம்மைப் பொருத்தவரை அ.இ.தி.மு.க வைத் திராவிட இயக்க அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிட இயக்கக் கட்சிகளில் தேர்தலில் பங்கு பெறுவோர், தேர்தலில் பங்கு பெறாமல் பணியாற்றுவோர் என இருபிரிவினர் இருக்கின்றனர். இக்கட்சிகள் தத்தம் நிலைகளுக்கு ஏற்ப அவர்களாகவே வேலைப்பகிர்வினை பகிர்ந்துகொண்டு செயலாற்றி வருகின்றனர். இதில் அரசியல் மாறூபாடு, ஈடுபடும் அளவு, வேகம், உணர்ச்சி மற்றும் குறை எல்லாம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபாடு உடையதாக இருந்திருக்கலாம்; இருக்கவும் கூடும். ஆனால், அவை பெரியார் வழியிலிருந்தோ, அண்ணா வழியிலிருந்தோ பிறழ்ந்து விட்டதாகச் சொல்லமுடியாது. அவுட்லுக் ஆங்கில வார ஏடு (20.09.2004) பெரியார் கொள்கையைப் பற்றிய இன்றைய நிலைகளைக் குற்றாச்சாட்டுகளாகத் தொடுத்துள்ளது.

அவற்றில் மிக முக்கியமானவை வருமாறு:

  • பெரியார் திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். அவர் இன்று மறக்கப்பட்டுவிட்டார். ம.தி.மு.க, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இன்றைய தினம் திராவிடர் கழகத்தினுடையக் கிளைகளாக இருந்து வருகின்றன.
  • பெரியாரின் பகுத்தறிவு நாத்திகவாதம் இன்றைய தினம் மறக்கப்பட்டுவிட்டது. திராவிடக் கட்சிகள் கூட தீவிரமாக மதம் சார்ந்தே இயங்கும் நிலையிலே இருந்து வருகிறது
  • தமிழிலும், ஆங்கிலத்திலும் பெரியாரின் கொள்கைப் பற்றிய வெளியீடுகள் கிடைக்கவில்லை. அதுவும் தமிழில் கிடைப்பதே இல்லை
  • இன்று தமிழ்நாட்டில் பகுத்தறிவு அற்ற தன்மைகளும், மூடநம்பிக்கைகளும் அதிகரித்துவிட்டன.
  • கற்பனை செய்ய முடியாத அளவுக்குத் தலித்துகளின் மேல் இழைக்ப்படும் கொடுமைகள் பெருகிவிட்டன.
  • பங்காரு அடிகளார், குட்டி சாமியார் போன்ற ஆன்மிகவாதிகளின் ஆதிக்கங்கள் பலமாகி வருகின்றன.
  • தமது உடல், பொருள், ஆவியை அரசியல் தலவர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் தருவதில் ஆண்களும், பெண்களும் போட்டியிடுகின்றனர்.
  • கருணாநிதி மஞ்சள் அங்கவஸ்திரம் போடுகிறார். அது மத அடையாளத்தை எதிரொலிக்கிறது.
  • ஜெயலலிதா திராவிட இயக்கக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிப்பவர்போல் காட்சி அளிக்கிறார். அவர் மதம் சார்ந்து ஒழுகுவதிலும், எண் சோதிடத்திலும் நம்பிக்கை உடையவராக இருந்து அவரது பெயரில் 'a' எனும் ஓர் எழுத்தை அதிகமாகச் சேர்த்துக்கொண்டார்
  • திராவிடக் கட்சிகள் பா.ஜ.க வோடு தேர்தல் உடன்பாடு கொண்டதை எப்படி ஏற்றுக்கொள்ளுவது?

இப்படிக் குற்றச்சாட்டுகளக் கூறுகிறார் - கட்டுரையாளர்!
அவர்க்குக் கீழ்க்காணும் பதில் அளிக்க விரும்புகின்றோம்.

  • அவுட்-லுக் கட்டுரையாளர்க்குப் பெரியாரின் திராவிடர் கழகத்தையும், திராவிட இயக்கக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.
  • உலகில் எந்த அரசியல் கட்சிகளும் தம்மை நாத்திகர் கட்சி என்று பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை.
  • கம்யூனிஸ்டு நாடுகளில் கூட அரசியலிலிருந்து மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை தனியாகத் தான் பிரித்து வைத்துள்ளனர்.
  • முழு நாத்திகக் கொள்கைய அடிப்ப்டையாகக் கொண்டு எந்த அரசும் இதுவரை ஆண்டதில்லை.
  • பெரியாரின் திராவிடர் கழகம் பகுத்தறிவு நாத்திகக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. தேர்தலில் நிற்பதில்லை எனும் குறிக்கோளை ஏற்று இயங்குவது.
  • அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களைத் தம் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேலை வாங்குவது.
  • அதிகாரத்தைக் கைக்கொள்ளாமலேயே இனம், மொழிச்சார்ந்த ச்மூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்குப் பாடுபடுவது திராவிடர் கழகத்தைத் தாய்க்கழகமாகக் கொண்டவை. ஆனால், பெரியாரின் பகுத்தறிவு - நாத்திகைக் கொள்கையைக் - கடவுள் மறுப்புக் கொள்கையை அப்படியே உள்வாங்கிக் கொண்டவை அல்ல.
  • ஆனால், பெரியாரின் மற்றக் கொள்கைகள் நிறைவேற்றுவதில் அவை கண்ணும் கருத்துமாக இருக்கின்றன்.

இதற்கு என்ன காரணம்?

  • (திராவிட) அரசியல் கட்சிகள் முழு நாத்திகக் கொள்கையை ஏற்று மக்களிடம் செல்லுவதில் இடர்பாடுகள் இருக்கின்றன.
  • சாக்ரடீஸ், பிளாட்டோ , அரிஸ்டாடில் ஆகியோரின் சிந்தனை நெறிகள் ஒரே அடிப்படையைக் கொண்டன. அவர்கள் ஒருவருக்கொருவர் குரு-சீட மரபை உடையவர்கள் என்றாலும், சமூக நடைமுறைகளில் அவர்களது கொள்கைகளை எடுத்து வைக்கும் விதத்தில் மாறுபாடுகள் இருந்தன.
  • அர்ஸ்டாடலின் கொள்கைகளை எவ்வளவுத் தூரம் நடைமுறைப்படுத்தினான் என்று பார்க்க வேண்டும்.
  • இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் எத்தனையோ தலைவர்கள் தோன்றினார்கள். ஆனால், காந்தியடிகளே அக்கால கட்டத்தில் முக்கியமான தலைவராகக் கருதப்பட்டார்.
  • காந்தியடிகளின் சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் பண்டித ஜவர்ஹலால் நேருவுக்கு ஏற்புடையதாக இல்லை. இருப்பினும் காந்தியடிகளின் தலைமய ஏற்றுக்கொண்டு இந்திய விடுதலைபோராட்டக்களத்தில் முக்கியப் பங்கைச் செலுத்தினார் நேரு.
  • இப்படி மாறுபாடுகளுகளுக்குள் அரசியல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுவிடுகிறபோது எதயும் நடைமுறைப்படுத்தத் தவிர்க்க முடியாததாய் ஆகிவிடுகிறது.
  • திராவிடக் கட்சிகள் அரசியல் ஈடுபாடு காரணமாக - பொது மக்களைச் சந்திக்கவேண்டும் - தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற நிலைக்காரணமாக ஒரு மாறுதல மேற்கொண்டுள்ளன.
  • ஆகவே, பெரியார் மறக்கபடவுமில்லை; அவர் மறைக்கபடவுமில்லை. திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் - (அ.இ.தி.மு.க நீங்கலாக) ம.தி.மு.க, தி.மு.க தலைவர்கள் பகுத்தறிவுவாதிகளாகவே இருந்து வருகிறார்கள். அவர்களுள் சிலர் நாத்திகர்களாகவும் இருந்து வருகிறார்கள். அவர்களுள் சிலர் நாத்திகர்களாகவும் இருக்கிறார்கள்.
  • இதர நிலைகளில் உள்ளவர்களைக் கட்சிகள் பயிற்றுவிக்கப் பாசறைகள், வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துகின்றன. இவை பெரியாரின் பெரியாரின் பகுத்தறிவு - நாத்திகவாதத்தை முன்னெடுத்துச் செல்லுபவையே ஆகும்.
  • திராவிடல் கட்சிகளின் தொண்டர்களுள் நாத்திகம், பகுத்தறிவு, ஆத்திகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்கிற அனைவரும் உறுப்பினர் நிலையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்கள். அரசியல் கட்சிக்கு இந்நிலை தேவைப்படுகிறது. ஆனால் திராவிடர் கழகம் இந்த நிலையிலிருந்து வேறுபாடாக இயங்குகிறது.
  • பொதுவாக திராவிடக் கட்சிகள், தந்தைப் பெரியாரின் பகுத்தறிவு - நாத்திகவாதக் கொள்கைகளைப் பயிற்றுவிகவே செய்கின்றன. அவற்றிலிருந்து அவை ஒருபோதும் பின்வாங்கியதில்லை.
  • பெரியாரின் கொள்கைப் பற்றிய வெளியீடுகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமாக வெளியிடப்பட்டுள்ளன. கிடைக்கவில்லை என்று சொல்லுவது முழுப்பொய் ஆகும். மறுமலர்ச்சி தி.மு.க 'A profile of the MDMK' எனப் பெரியார், அண்ணாவைப் பற்றீயும் கட்சியைப் பற்றியுமான பிரகடனத்தை வெளியிட்டு இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகத்திலேயே பகுத்தறிவு அற்ற தன்மைகளும் மூடநம்பிக்கைகளும் எப்போதும் போலவே இருக்கின்றன.அதை எதிர்த்துப் போராடுகிற இயக்கங்களும் பணியாற்றவே செய்கின்றன.
  • இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் அதன் வளர்ச்சி நிலையைக் கணக்கிட்டால் பெரியார் காலத்தில் இருந்ததைவிட பகுத்தறிவு - நாத்திகக் கொள்கை வளர்ந்தே இருக்கிறது; அய்யமே இல்லை.
  • தலித் கொடுமைகள் பற்றித் திராவிட இயக்கத்தைக் குற்றஞ்சொல்லுவது வாடிக்கையாகிவிட்டது. திராவிட இயக்கம் என்பது 'பார்ப்பனரல்லாத அனைத்து வகுப்புகளின்' கூட்டமைப்பு என்பதை மறந்து திராவிடக்கட்சிகளின் மீது தலித் கொடுமைகளுக்குக் காரணம் கற்பிக்கிறார்கள். 'தலித்' கொடுமைகளை வரவேற்கிற்கிற அமைப்புகள் அல்ல - திராவிடக்கட்சிகள்!
  • மத நிறுவனங்களைச் சார்ந்தும் சாரமலும் சில தனி நபர்கள் அதன் சார்பாகத் தோன்றுவதும் திராவிடக் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பாகவே இருந்து வந்திருக்கின்ற நிகழ்ச்சிப்போக்குகளாகும் - அதற்கும் திராவிடக் கட்சிகளைக் குற்றஞ்சொல்வது எப்படி நியாயம் என்றே நமக்குத் தெரியவில்லை
  • பகுத்தறிவு இயக்கங்கள் காலந்தோறும் - இவற்றை எதிர்த்துப் போரிட்டு வந்துள்ளன. மக்கள் நம்பிக்கை இதற்கு முதல் காரணமாகத் திகழுவதால் அந்த நம்மிக்கையை அறிவின் மூலம் தகர்க்கிற பணியைத் திராவிடக்கட்சிகள் செய்தே வருகின்றன.
  • மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 'தொண்டர்கள்' காலில் விழுகிற கலாசாரத்தையும், இதர பண்பாடற்ற, முறையற்ற தேவையற்ற நடைமுறைகளையும் கண்டனம் செய்து வருகிறது.
  • கலஞர் 'மஞ்சள் துண்டு' அணிவது தொடர்பாக அவரே பதிலளித்து இருக்கிறார். அது எப்படி மதஞ்சார்ந்த அடையாளமாகும் என்று தெரியவில்லை.
  • ஜெயலலிதா திராவிடக்கட்சிகளின் பெயரால் இயங்குபவர். அவரது நடவடிக்கைகளுக்கும் பெரியார், அண்ணா கொள்கைகளுக்கும் தொடர்பு அறவே இல்லை என்பதை இந்த நாடே அறியும். நாம் அதில் புதிதாக ஒன்றும் சொல்லுவதற்கில்லை
  • திராவிட இயக்கக் கட்சிகள் பா.ஜ.கவோடு உறவு வைத்தது விசித்திரமான ஒன்று என்று கருதிவிட முடியாது.சிலபோது அரசியல் தேவை என்பது ஒரு நிர்பந்தமான சூழ்நிலையில் ஏற்படக்கூடியது. அதன்மூலம் அவர்களிடமிருந்தே தற்காத்துக்கொள்ளக்கூடிய உத்தியாக அதனை ஏன் கொள்ளக்கூடாது?
  • சில கட்சியினர் பா.ஜ.க அரசை வெளியில் இருந்து ஆதரித்ததும் ஒரு அரசியல் தேவை; நிபந்தம்தான்! எதிரான கொள்கைகள் இருந்தும் 'அவர்கள்' செய்ததுபோல்தான் திராவிடக் கட்சிகள் பா.ஜ.க அணியில் பங்கேற்றதும் ஆகும்.
  • பெரியார் 'அரசியலை' அரசியலில் ஈடுபடாமல் நடத்தியவர். அவர் பகுத்தறிவு - நாத்திகர்.
  • அறிஞர் அண்ணா அரசியலில் ஈடுபாடு கொண்டு சமுதாயத்தில் பகுத்தறிவையும் பொருளாதாரத்தில் சமதர்மத்தையும் நிலைநாட்டப் படுபட்டவர்.
  • இவர்கள் அறிவின் வெளிப்பாட்டை 'இலக்கியமாய்க்' கருதுகிறவர்கள் நாங்கள்! நாம் இன்றும் இவர்களின் அடிச்சுவட்டில் நடக்கின்றோம். நம்மைப் பொருத்தவரை அ.இ.தி.மு.க வைத் திராவிட இயக்க அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிட இயக்கக் கட்சிகளில் தேர்தலில் பங்கு பெறுவோர், தேர்தலில் பங்கு பெறாமல் பணியாற்றுவோர் என இருபிரிவினர் இருக்கின்றனர்.
  • இக்கட்சிகள் தத்தம் நிலைகளுக்கு ஏற்ப அவர்களாகவே வேலைப்பகிர்வினை பகிர்ந்துகொண்டு செயலாற்றி வருகின்றனர். இதில் அரசியல் மாறூபாடு, ஈடுபடும் அளவு, வேகம், உணர்ச்சி மற்றும் குறை எல்லாம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபாடு உடையதாக இருந்திருக்கலாம்; இருக்கவும் கூடும்.
  • ஆனால், அவை பெரியார் வழியிலிருந்தோ, அண்ணா வழியிலிருந்தோ பிறழ்ந்து விட்டதாகச் சொல்லமுடியாது. அவுட்லுக் ஆங்கில வார ஏடு (20.09.2004) பெரியார் கொள்கையைப் பற்றிய இன்றைய நிலைகளைக் குற்றாச்சாட்டுகளாகத் தொடுத்துள்ளது.

அவற்றில் மிக முக்கியமானவை வருமாறு:

1. பெரியார் திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். அவர் இன்று மறக்கப்பட்டுவிட்டார். ம.தி.மு.க, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இன்றைய தினம் திராவிடர் கழகத்தினுடையக் கிளைகளாக இருந்து வருகின்றன.
2. பெரியாரின் பகுத்தறிவு நாத்திகவாதம் இன்றைய தினம் மறக்கப்பட்டுவிட்டது. திராவிடக் கட்சிகள் கூட தீவிரமாக மதம் சார்ந்தே இயங்கும் நிலையிலே இருந்து வருகிறது
3. தமிழிலும், ஆங்கிலத்திலும் பெரியாரின் கொள்கைப் பற்றிய வெளியீடுகள் கிடைக்கவில்லை. அதுவும் தமிழில் கிடைப்பதே இல்லை
4. இன்று தமிழ்நாட்டில் பகுத்தறிவு அற்ற தன்மைகளும், மூடநம்பிக்கைகளும் அதிகரித்துவிட்டன.
5. கற்பனை செய்ய முடியாத அளவுக்குத் தலித்துகளின் மேல் இழைக்ப்படும் கொடுமைகள் பெருகிவிட்டன.
6. பங்காரு அடிகளார், குட்டி சாமியார் போன்ற ஆன்மிகவாதிகளின் ஆதிக்கங்கள் பலமாகி வருகின்றன.
7. தமது உடல், பொருள், ஆவியை அரசியல் தலவர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் தருவதில் ஆண்களும், பெண்களும் போட்டியிடுகின்றனர்.
8. கருணாநிதி மஞ்சள் அங்கவஸ்திரம் போடுகிறார். அது மத அடையாளத்தை எதிரொலிக்கிறது.
9. ஜெயலலிதா திராவிட இயக்கக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிப்பவர்போல் காட்சி அளிக்கிறார். அவர் மதம் சார்ந்து ஒழுகுவதிலும், எண் சோதிடத்திலும் நம்பிக்கை உடையவராக இருந்து அவரது பெயரில் 'a' எனும் ஓர் எழுத்தை அதிகமாகச் சேர்த்துக்கொண்டார்
10. திராவிடக் கட்சிகள் பா.ஜ.க வோடு தேர்தல் உடன்பாடு கொண்டதை எப்படி ஏற்றுக்கொள்ளுவது?

இப்படிக் குற்றச்சாட்டுகளக் கூறுகிறார் - கட்டுரையாளர்!
அவர்க்குக் கீழ்க்காணும் பதில் அளிக்க விரும்புகின்றோம்.
  • அவுட்-லுக் கட்டுரையாளர்க்குப் பெரியாரின் திராவிடர் கழகத்தையும், திராவிட இயக்கக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.
  • உலகில் எந்த அரசியல் கட்சிகளும் தம்மை நாத்திகர் கட்சி என்று பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை.
  • கம்யூனிஸ்டு நாடுகளில் கூட அரசியலிலிருந்து மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை தனியாகத் தான் பிரித்து வைத்துள்ளனர்.
  • முழு நாத்திகக் கொள்கைய அடிப்ப்டையாகக் கொண்டு எந்த அரசும் இதுவரை ஆண்டதில்லை.
  • பெரியாரின் திராவிடர் கழகம் பகுத்தறிவு நாத்திகக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. தேர்தலில் நிற்பதில்லை எனும் குறிக்கோளை ஏற்று இயங்குவது.
  • அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களைத் தம் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேலை வாங்குவது.
  • அதிகாரத்தைக் கைக்கொள்ளாமலேயே இனம், மொழிச்சார்ந்த ச்மூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்குப் பாடுபடுவது திராவிடர் கழகத்தைத் தாய்க்கழகமாகக் கொண்டவை. ஆனால், பெரியாரின் பகுத்தறிவு - நாத்திகைக் கொள்கையைக் - கடவுள் மறுப்புக் கொள்கையை அப்படியே உள்வாங்கிக் கொண்டவை அல்ல.
  • ஆனால், பெரியாரின் மற்றக் கொள்கைகள் நிறைவேற்றுவதில் அவை கண்ணும் கருத்துமாக இருக்கின்றன்.

    இதற்கு என்ன காரணம்?

    • (திராவிட) அரசியல் கட்சிகள் முழு நாத்திகக் கொள்கையை ஏற்று மக்களிடம் செல்லுவதில் இடர்பாடுகள் இருக்கின்றன.
    • சாக்ரடீஸ், பிளாட்டோ , அரிஸ்டாடில் ஆகியோரின் சிந்தனை நெறிகள் ஒரே அடிப்படையைக் கொண்டன. அவர்கள் ஒருவருக்கொருவர் குரு-சீட மரபை உடையவர்கள் என்றாலும், சமூக நடைமுறைகளில் அவர்களது கொள்கைகளை எடுத்து வைக்கும் விதத்தில் மாறுபாடுகள் இருந்தன.
    • அர்ஸ்டாடலின் கொள்கைகளை எவ்வளவுத் தூரம் நடைமுறைப்படுத்தினான் என்று பார்க்க வேண்டும்.
    • இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் எத்தனையோ தலைவர்கள் தோன்றினார்கள். ஆனால், காந்தியடிகளே அக்கால கட்டத்தில் முக்கியமான தலைவராகக் கருதப்பட்டார்.
    • காந்தியடிகளின் சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் பண்டித ஜவர்ஹலால் நேருவுக்கு ஏற்புடையதாக இல்லை. இருப்பினும் காந்தியடிகளின் தலைமய ஏற்றுக்கொண்டு இந்திய விடுதலைபோராட்டக்களத்தில் முக்கியப் பங்கைச் செலுத்தினார் நேரு.
    • இப்படி மாறுபாடுகளுகளுக்குள் அரசியல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுவிடுகிறபோது எதயும் நடைமுறைப்படுத்தத் தவிர்க்க முடியாததாய் ஆகிவிடுகிறது.
    • திராவிடக் கட்சிகள் அரசியல் ஈடுபாடு காரணமாக - பொது மக்களைச் சந்திக்கவேண்டும் - தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற நிலைக்காரணமாக ஒரு மாறுதல மேற்கொண்டுள்ளன.
    • ஆகவே, பெரியார் மறக்கபடவுமில்லை; அவர் மறைக்கபடவுமில்லை. திராவிடக்கட்சிகளின் தலைவர்கள் - (அ.இ.தி.மு.க நீங்கலாக) ம.தி.மு.க, தி.மு.க தலைவர்கள் பகுத்தறிவுவாதிகளாகவே இருந்து வருகிறார்கள். அவர்களுள் சிலர் நாத்திகர்களாகவும் இருந்து வருகிறார்கள். அவர்களுள் சிலர் நாத்திகர்களாகவும் இருக்கிறார்கள்.
    • இதர நிலைகளில் உள்ளவர்களைக் கட்சிகள் பயிற்றுவிக்கப் பாசறைகள், வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துகின்றன. இவை பெரியாரின் பெரியாரின் பகுத்தறிவு - நாத்திகவாதத்தை முன்னெடுத்துச் செல்லுபவையே ஆகும்.
    • திராவிடல் கட்சிகளின் தொண்டர்களுள் நாத்திகம், பகுத்தறிவு, ஆத்திகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்கிற அனைவரும் உறுப்பினர் நிலையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்கள். அரசியல் கட்சிக்கு இந்நிலை தேவைப்படுகிறது. ஆனால் திராவிடர் கழகம் இந்த நிலையிலிருந்து வேறுபாடாக இயங்குகிறது.
    • பொதுவாக திராவிடக் கட்சிகள், தந்தைப் பெரியாரின் பகுத்தறிவு - நாத்திகவாதக் கொள்கைகளைப் பயிற்றுவிகவே செய்கின்றன. அவற்றிலிருந்து அவை ஒருபோதும் பின்வாங்கியதில்லை.
    • பெரியாரின் கொள்கைப் பற்றிய வெளியீடுகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமாக வெளியிடப்பட்டுள்ளன. கிடைக்கவில்லை என்று சொல்லுவது முழுப்பொய் ஆகும். மறுமலர்ச்சி தி.மு.க 'A profile of the MDMK' எனப் பெரியார், அண்ணாவைப் பற்றீயும் கட்சியைப் பற்றியுமான பிரகடனத்தை வெளியிட்டு இருக்கிறது.
    • தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகத்திலேயே பகுத்தறிவு அற்ற தன்மைகளும் மூடநம்பிக்கைகளும் எப்போதும் போலவே இருக்கின்றன.அதை எதிர்த்துப் போராடுகிற இயக்கங்களும் பணியாற்றவே செய்கின்றன.
    • இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் அதன் வளர்ச்சி நிலையைக் கணக்கிட்டால் பெரியார் காலத்தில் இருந்ததைவிட பகுத்தறிவு - நாத்திகக் கொள்கை வளர்ந்தே இருக்கிறது; அய்யமே இல்லை.
    • தலித் கொடுமைகள் பற்றித் திராவிட இயக்கத்தைக் குற்றஞ்சொல்லுவது வாடிக்கையாகிவிட்டது. திராவிட இயக்கம் என்பது 'பார்ப்பனரல்லாத அனைத்து வகுப்புகளின்' கூட்டமைப்பு என்பதை மறந்து திராவிடக்கட்சிகளின் மீது தலித் கொடுமைகளுக்குக் காரணம் கற்பிக்கிறார்கள். 'தலித்' கொடுமைகளை வரவேற்கிற்கிற அமைப்புகள் அல்ல - திராவிடக்கட்சிகள்!
    • மத நிறுவனங்களைச் சார்ந்தும் சாரமலும் சில தனி நபர்கள் அதன் சார்பாகத் தோன்றுவதும் திராவிடக் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பாகவே இருந்து வந்திருக்கின்ற நிகழ்ச்சிப்போக்குகளாகும் - அதற்கும் திராவிடக் கட்சிகளைக் குற்றஞ்சொல்வது எப்படி நியாயம் என்றே நமக்குத் தெரியவில்லை
    • பகுத்தறிவு இயக்கங்கள் காலந்தோறும் - இவற்றை எதிர்த்துப் போரிட்டு வந்துள்ளன. மக்கள் நம்பிக்கை இதற்கு முதல் காரணமாகத் திகழுவதால் அந்த நம்மிக்கையை அறிவின் மூலம் தகர்க்கிற பணியைத் திராவிடக்கட்சிகள் செய்தே வருகின்றன.
    • மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 'தொண்டர்கள்' காலில் விழுகிற கலாசாரத்தையும், இதர பண்பாடற்ற, முறையற்ற தேவையற்ற நடைமுறைகளையும் கண்டனம் செய்து வருகிறது.
    • கலஞர் 'மஞ்சள் துண்டு' அணிவது தொடர்பாக அவரே பதிலளித்து இருக்கிறார். அது எப்படி மதஞ்சார்ந்த அடையாளமாகும் என்று தெரியவில்லை.
    • ஜெயலலிதா திராவிடக்கட்சிகளின் பெயரால் இயங்குபவர். அவரது நடவடிக்கைகளுக்கும் பெரியார், அண்ணா கொள்கைகளுக்கும் தொடர்பு அறவே இல்லை என்பதை இந்த நாடே அறியும். நாம் அதில் புதிதாக ஒன்றும் சொல்லுவதற்கில்லை
    • திராவிட இயக்கக் கட்சிகள் பா.ஜ.கவோடு உறவு வைத்தது விசித்திரமான ஒன்று என்று கருதிவிட முடியாது.சிலபோது அரசியல் தேவை என்பது ஒரு நிர்பந்தமான சூழ்நிலையில் ஏற்படக்கூடியது. அதன்மூலம் அவர்களிடமிருந்தே தற்காத்துக்கொள்ளக்கூடிய உத்தியாக அதனை ஏன் கொள்ளக்கூடாது?
    • சில கட்சியினர் பா.ஜ.க அரசை வெளியில் இருந்து ஆதரித்ததும் ஒரு அரசியல் தேவை; நிபந்தம்தான்! எதிரான கொள்கைகள் இருந்தும் 'அவர்கள்' செய்ததுபோல்தான் திராவிடக் கட்சிகள் பா.ஜ.க அணியில் பங்கேற்றதும் ஆகும்.
    • பெரியார் 'அரசியலை' அரசியலில் ஈடுபடாமல் நடத்தியவர். அவர் பகுத்தறிவு - நாத்திகர்.
    • அறிஞர் அண்ணா அரசியலில் ஈடுபாடு கொண்டு சமுதாயத்தில் பகுத்தறிவையும் பொருளாதாரத்தில் சமதர்மத்தையும் நிலைநாட்டப் படுபட்டவர்.
    • இவர்கள் அறிவின் வெளிப்பாட்டை 'இலக்கியமாய்க்' கருதுகிறவர்கள் நாங்கள்! நாம் இன்றும் இவர்களின் அடிச்சுவட்டில் நடக்கின்றோம்.

Module Border Module Border
Module Border   Module Border
"அரசியலில் நேர்மை
பொது வாழ்வில் தூய்மை
இலட்சியத்தில் உறுதி"

விடியல்
ஞாயிறு தோறும் ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சிறப்பு ஒளிபரப்பு
விடியல் பாகம் 1
விடியல் பாகம் 2
விடியல் பாகம் 3
விடியல் பாகம் 4
விடியல் பாகம் 5
விடியல் பாகம் 6
வைகோ உரைகள்
தேசிய இளைஞர் நாள் 2001
ஸ்டார் தொலைக்காட்சியில்
திருவாசகம்
Module Border Module Border